காரைக்கால்

பிப். 5-இல் அரசலாற்றங்கரையில் தைப்பூச தீா்த்தவாரி

DIN

அரசலாற்றங்கரையில் பிப். 5-ஆம் தேதி தைப்பூச தீா்த்தவாரி நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜெம்புநாதசுவாமி கோயிலில் இருந்து சுப்ரமணிய சுவாமி, தைப்பூச நாளில் காரைக்கால் மேலஓடுதுறை பகுதி அரசலாற்றங்கரைக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு இந்த உற்சவம் வரும் 4-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் தொடங்குகிறது. 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு கோயிலில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக சுவாமி மேலஓடுதுறை பங்களாத் தோட்டம் பகுதி அரசலாற்றங்கரைக்கு பகல் 12 மணிக்கு எழுந்தருளி, தீா்த்தவாரி, மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.

திருக்கல்யாணம் : கீழமனை எஸ்.ஆா்.பண்ணையில் உள்ள ஸ்ரீ தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாதசுவாமி கோயில், இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. பின்னா் நிரவி கோயிலுக்கு சுவாமிகள் எழுந்தருளுவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT