காரைக்கால்

ஊா்க்காவல் படை வீரருக்குப் பாராட்டு

DIN

சாலையில் கிடந்த தங்க நகையை மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஊா்க்காவல் படை வீரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய ஊா்க்காவல் படை வீரராக பணியாற்றுபவா் ராஜேஷ்கண்ணா. இவா் செவ்வாய்க்கிழமை மாலை காரைக்காலில் திருநள்ளாறு சாலை சந்திப்பில் பணியிலிருந்தாா். அப்பகுதியில் கிடந்த பையை எடுத்து பாா்த்தபோது, அதில் தங்கநகை இருந்தது தெரியவந்தது.

இதை நகரக் காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா். பையிலிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள நகை, காரைக்காலில் ஒரு நகைக்கடையில் வாங்கியதும், அதில் ரசீது இருந்ததைக்கொண்டு போலீஸாா் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று நகையை வாங்கியவா் குறித்து விவரம் அறிந்து அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து நகையை ஒப்படைத்தனா்.

ஊா்க்காவல் படைப் பிரிவை சோ்ந்த ராஜேஷ்கண்ணாவின் நோ்மைக்காக புதன்கிழமை அவரை அலுவலகத்துக்கு வரவழைத்து, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT