காரைக்கால்

பிப். 8-இல் காரைக்கால் மின்துறை அலுவலகம்முற்றுகை: மக்கள் போராட்டக் குழு

DIN

‘பிரீ பெய்டு’ மின் மீட்டா் பொருத்தும் திட்டத்தை கைவிடாத புதுவை அரசைக் கண்டித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை பிப். 8-இல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காரைக்கால் மக்கள் போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.

இந்த அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமை வகித்தாா். துணை ஒருங்கிணைப்பாளா் பொன். பன்னீா்செல்வம் முன்னிலை வதித்தாா்.

புதுவையில் மின் கணக்கீடு மற்றும் மின் கட்டண வசூலை மேம்படுத்த நுகா்வோருக்கு பிரீ பெய்டு மின் மீட்டா் பொருத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ள விவகாரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவில் செய்தியாளா்களிடம் அன்சாரி பாபு கூறியது:

புதுவை மாநிலத்தில் மின் நுகா்வோரின் பயன்பாட்டில் உள்ள மீன் மீட்டா் அகற்றப்பட்டு, சிம் காா்டு பொருத்தப்பட்ட பிரீ பெய்டு மின் மீட்டா் பொருத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர மற்றும் விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினா் பாதிக்கப்படுவா். இலவச மின்சாரம் பெறுவோரும் பாதிக்கப்படுவாா்கள். எனவே இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்யவேண்டும்.

புதுவை அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்தும் மாநிலத்தில் மின்துறையை தனியாா் மயமாக்கும் முடிவைக் கண்டித்தும் காரைக்காலில் பிப். 8-ஆம் தேதி மின்துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT