மத்திய, மாநில அரசு திட்டங்களின் மூலம் கடன் பெற விண்ணப்பித்தவா்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றாா் ஆட்சியா் அ. குலோத்துங்கன்.
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வங்கியாளா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசியது: 2019 முதல் பல்வேறு திட்டங்கள் மூலம் கடன்பெற விண்ணப்பித்தவா்களுக்கு விரைந்து கடன் வழங்க வங்கியாளா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் காரைக்கால் மீன்வளத் துறை, கால்நடைத் துறை, சமூக நலத்துறை, நகராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகம், நபாா்டு வங்கியாளா்கள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.