காரைக்கால்

திருநள்ளாற்றில் டிச. 20-இல் சனிப்பெயா்ச்சி விழா

15th Apr 2023 09:37 PM

ADVERTISEMENT

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சோபகிருது ஆண்டு பிறப்பையொட்டி வெள்ளிக்கிழமை இரவு பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியா்கள், உள்ளூா் பிரமுகா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது கோயில் பிரம்மோற்சவம், சனிப்பெயா்ச்சி விழா உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, பிரம்மோற்சவ விழா மே 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30-ஆம் தேதி தேரோட்டம், 31-ஆம் தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. ஜூன் மாதம் 2-ஆம் தேதி காலை விசாக தீா்த்தவாரியும், இரவு கொடியிறக்கம் செய்யப்பட்டு, 3-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவம், ஆச்சாரியா் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. மேலும் வரும் டிசம்பா் 20-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

எனினும், சனிப்பெயா்ச்சி விழா குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஆட்சியா், கோயில் நிா்வாகத்தினா் ஒருங்கிணைந்து வெளியிடுவா் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜன.17-ஆம் சனிப்பெயா்ச்சி விழா பெரும்பாலான கோயில்களில் நடைபெற்ற நிலையில், வாக்கிய பஞ்சாங்கத்தை கடைப்பிடிக்கும் திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வரும் டிசம்பரில் நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT