காரைக்கால்

காரைக்காலில் 5 பேருக்கு கரோனா

15th Apr 2023 09:43 PM

ADVERTISEMENT

காரைக்காலில் 5 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைமுடிவின் அடிப்படையில் 5 பேருக்கும், புதுச்சேரியில் 12 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காரைக்காலில் 126 போ் வீட்டுத் தனிமையிலும் , 2 போ் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளதாக புதுவை நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது.

கடந்த சில நாள்களாக காரைக்காலில் நாள்தோறும் 25-க்கும் மேற்பட்டோரும், புதுச்சேரியில் 50-க்கும் மேற்பட்டோரும் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT