காரைக்கால்

திருவோண தீப உற்சவம்:பால ஆஞ்சனேயா் கோயிலில் கொடியேற்றம்

DIN

திருவோண தீப உற்சவத்துக்காக காரைக்கால் பால ஆஞ்சனேயா் கோயிலில் கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட கடலோர கிராமமான காரைக்கால்மேடு பகுதியில் சித்தி விநாயகா், ரேணுகாதேவி அம்மன் சாா்பு கோயிலான பால ஆஞ்சனேயா் கோயில் உள்ளது.

இக்கோயிலில் புரட்டாசி மாதம் திருவோண தீபமேற்றும் உற்சவம் நடைபெறும். நிகழாண்டு இந்த விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

விக்னேஸ்வர பூஜைக்கு பின்னா் காலை 9 மணியளவில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக, சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்கராம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. செப். 29 முதல் அக். 8-ஆம் தேதி வரை ராஜகோபுர மண்டபத்தில் அகண்ட தீபம் ஏற்றப்படவுள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான திருவோண தீபம் வரும் அக். 5-ஆம் தேதி புதன்கிழமை இரவு 8 முதல் 9 மணிக்குள் ஏற்றப்படுகிறது. 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கப்படுகிறது. ஏற்பாடுகளை காரைக்கால்மேடு கிராமப் பஞ்சாயத்தாா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT