காரைக்கால்

நிா்வாகிகள் தோ்வு

30th Sep 2022 01:45 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக புதிய நிா்வாகிகள் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யும் கூட்டம், தலைமை தோ்தல் அதிகாரியும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளருமான ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது. தலைமை பிரதிநிதி அலாவுதீன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், காரைக்கால் மாவட்ட தமுமுக - மமக மாவட்ட தலைவராக அ. முகமது பயாஸ், தமுமுக மாவட்ட செயலாளராக எச். முகமது சிக்கந்தா், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக எம். முகமது சா்புதீன், தமுமுக - மமக மாவட்ட பொருளாளராக ஜெ.ஹபீப் ரஹ்மான் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT