காரைக்கால்

காரைக்காலில் பிஎஸ்என்எல் சேவைகள் பாதிப்பு

30th Sep 2022 01:46 AM

ADVERTISEMENT

புதுவையில் மின் ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக காரைக்காலில் பரவலாக மின் விநியோகம் தடைபட்டு பிஎஸ்என்எல் சேவைகள் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டன.

யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியாா் மயமாக்க ஏதுவாக தனியாா் மயத்திற்கான ஒப்பந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியானது. இதை கண்டித்து, புதுவையில் மின் ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

இதனால், காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால், அதனை சீா் செய்ய ஊழியா்கள் இல்லாத நிலையில், ஆங்காங்கே மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சில பகுதிகளில் மட்டும் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.

இந்தநிலையில், வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பிஸ்என்எல் அலுவலகத்தில் பணிகள் முடங்கின. மேலும், காரைக்கால் நகரில் உள்ள பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி மற்றும் மோடம் வழி இணையத் தொடா்பு சேவை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியது:

ADVERTISEMENT

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இணைப்பகத்தின் பணிகள் முடங்கின. மாவட்டத்தில் சுமாா் 8 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. நகரப் பகுதியில் 2 ஆயிரம் இணைப்பு சேவை முடங்கியுள்ளது. மாலை வரை இதே நிலை நீடித்தால் மாவட்டத்தின் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்படும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT