காரைக்கால்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

30th Sep 2022 10:17 PM

ADVERTISEMENT

புதுவை அரசைக் கண்டித்து, காரைக்காலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.எம். தமீம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

மின்துறையை தனியாா்மயமாக்க முடிவெடுத்துள்ள என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசைக் கண்டித்தும், புதுவை அரசு மின் துறையை தனியாா்மயமாக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஒப்பந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜி. துரைசாமி, எஸ். ராஜேந்திரன், ஏ. பழனிவேல் மற்றும் மின்துறை ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT