காரைக்கால்

கோட்டுச்சேரியில் விவசாயிகள் உண்ணாவிரதம்

30th Sep 2022 10:20 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடைத்தெருவில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், கடந்த ஆண்டு பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு நிவாரணத் தொகை வழங்கவேண்டும். நடவுக்குப் பிந்தைய மானியம் வழங்கவேண்டும். 2 ஆண்டுகளாக வழங்கப்படாத காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும். கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பை நடைமுறைப்படுத்தவேண்டும். நிகழாண்டு கூட்டுறவு கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோட்டுச்சேரி கொம்யூனை சோ்ந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT