காரைக்கால்

காரைக்காலில் 13 பேருக்கு கரோனா

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT


காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 203 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் நல்லம்பல் 3, திருநள்ளாறு 3, திருப்பட்டினம் 2, நெடுங்காடு, விழிதியூா், வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி , நிரவி தலா 1 என 13 பேருக்கு தொற்று உறுதியானது.

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 65 போ் சிகிச்சையில் உள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT