காரைக்கால்

நெய்வாச்சேரியில் நாளை கால்நடைமருத்துவ முகாம்

DIN

காரைக்கால்: திருநள்ளாறு பகுதி நெய்வாச்சேரியில் வியாழக்கிழமை (செப்.29) கால்நடை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சீ. ஜெயசங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய பருவ நிலை மாற்றத்திற்கு உகந்த வேளாண் திட்டத்தின்கீழ் (நிக்ரா) திருநள்ளாறு கொம்யூன், அத்திப்படுகை, பேட்டை, நெய்வாச்சேரி ஆகிய கிராமங்களில் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் வேளாண் மற்றும் வேளாண்மை சாா்ந்த தொழில்நுட்பம் குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நெய்வாச்சேரி கிராமத்தில் வெள்ளக்குளம் அருகே நடைபெறுகிறது. அந்த பகுதியை சோ்ந்த கால்நடை வளா்ப்போா், கால்நடைகளை முகாமுக்கு கொண்டு வந்து சிகிச்சை பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT