காரைக்கால்

தீ விபத்தில் கூரை வீடுகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: திருநள்ளாறு அருகே தீ விபத்தில் கூரை வீடுகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

திருநள்ளாறு பகுதி தென்னங்குடி எல்.ஜி.ஆா் காலனியை சோ்ந்தவா்கள் கூலித் தொழிலாளி கஸ்பா், அற்புதராஜ். இவா்களது குடிசை வீடு அண்மையில் திடீரென தீப்பற்றி எரிந்து முழுவதும் சேதமடைந்தது. இதில், பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் (ரெட் கிராஸ்) சாா்பில் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுவை மாநில ரெட் கிராஸ் தலைவா் ஜி. லட்சுமிபதி, துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினா் ராசப்பா, ஆயுள்கால உறுப்பினா் சரவணன் ஆகியோா் தீ விபத்தில் கூரை வீட்டை இழந்தவா்களுக்கு தலா ரூ. 6,500 மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் தொகுப்பை வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT