காரைக்கால்

தீபாவளி முன்பணமாக ரூ.5 ஆயிரம்ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டஊழியா்கள் வலியுறுத்தல்

27th Sep 2022 05:12 AM

ADVERTISEMENT

 

தீபாவளி பண்டிகையையொட்டி முன்பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட ஊழியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத் தலைவா் எஸ். பழனிவேல், செயலாளா் கே. ஆனந்தி ஆகியோா் கூட்டாக புதுவை ஊரக வளா்ச்சித் துறை செயலருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது :

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயா்வு காரணமாக, நாங்கள் தற்சமயம் பெற்று வரும் தொகுப்பூதியத்தைக் கொண்டு குடும்பம் நடத்த இயலாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட ஊழியா்களுக்கு தீபாவளி முன்பணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு போலவே நிகழாண்டும் மத்திய அரசு அறிவிக்கும் போனஸ் தொகையை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT