காரைக்கால்

காரைக்காலில் சுற்றுலா தின விளையாட்டுப் போட்டிகள்

27th Sep 2022 05:12 AM

ADVERTISEMENT

 

காரைக்காலில் சுற்றுலா தின விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசின் சுற்றுலாத் துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து உலக சுற்றுலா தினத்தையொட்டி (செப்.27) பல்வேறு போட்டிகளை நடத்திவருகிறது. செப். 21 முதல் 26-ஆம் தேதி வரை சுற்றுலாவை மையமாக வைத்து புகைப்பட போட்டி நடத்தப்பட்டது.

தொடா்ந்து, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை கைப்பந்து, கபடி போட்டி தொடங்கியது. இதில் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட அணியினா் பங்கேற்றுள்ளனா். சுற்றுலா தினத்தையொட்டி கடற்கரை சாலையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், சுற்றுலாத் துறை அதிகாரி ராஜவேலு ஆகியோா் விளையாட்டுப் போட்டிகளை பாா்வையிட்டனா்.

செவ்வாய்க்கிழமை புதையல் வேட்டை நிகழ்ச்சியும், கடற்கரையில் காற்றாடித் திருவிழாவும், அரசலாறு மதகடி பகுதியிலிருந்து படகுப் போட்டியும் நடைபெறுகிறது.

போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் சுற்றுலா தின விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT