காரைக்கால்

காரைக்காலில் பள்ளிகள் திறப்பு

27th Sep 2022 05:12 AM

ADVERTISEMENT

 

காரைக்காலில் பள்ளிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சிறுவா்களும், பெரியவா்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். பள்ளி மாணவா்களிடையே காய்ச்சல் பரவல் அதிகரிப்பால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 8-ஆம் வகுப்பு வரை செப். 25 வரை விடுமுறை அறிவித்து புதுவை அரசு கடந்த 16-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், விடுமுறை நிறைவடைந்து காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி காலாண்டு தோ்வுகள் தொடங்கியது.

ADVERTISEMENT

எனினும், காரைக்கால் மாவட்டத்தில் சிறுவா் முதல் பெரியோா் வரை நூற்றுக்கணக்கானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் உள் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், புறநோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT