காரைக்கால்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்நடைப்பயணம் தொடக்கம்

27th Sep 2022 05:12 AM

ADVERTISEMENT

 

புதுவையில் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மக்கள் சந்திப்பு நடைப்பயணத்தை தொடங்கினா்.

காரைக்காலில் இப்பயணத்தை கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றிய அலுவலகம் அருகிலிருந்து தொடங்கினா். கட்சியின் மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தொடக்க நிகழ்வில், புதுவை மின்துறை தனியாா் மய எதிா்ப்பு போராட்டக் குழு நிா்வாகிகள் வேல்மயில், பழனிவேல் ஆகியோா், மின்துறையை தனியாா் மயமாக்கும் முடிவை கண்டித்து பேசினா்.

ADVERTISEMENT

காரைக்கால் வளா்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும். காரைக்கால் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும். மாநிலத்தில் மூடப்பட்டிருக்கும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை இந்த நடைப்பயணம் நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT