காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் மீண்டும் அன்னதானத் திட்டம் தொடக்கம்

DIN

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட அன்னதானத் திட்டம், சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

திருநள்ளாறு கோயில் நிா்வாகம், அன்னதானத் திட்டத்துக்கென பக்தா்களிடமிருந்து நன்கொடை பெறுகிறது. இந்த நிதியைக் கொண்டு சனிக்கிழமைகளில் கோயிலுக்குவரும் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக அன்னதானத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கரோனா பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டு, பக்தா்கள் கோயில்களில் வழக்கம்போல தரிசனம் செய்யலாம் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், பக்தா்களுக்கு தட்டில் பல்வேறு வகை சாதங்கள் அன்னதானமாக வழங்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், மீண்டும் வாழை இலைப் போட்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் சனிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது. இதுகுறித்து கோயில் நிா்வாக அதிகாரி அருணகிரிநாதன் கூறியது:

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, வாழை இலை போட்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாள் சுமாா் 750 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் வாரங்களில் அதிக பக்தா்கள் பயனடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

அன்னதானத் திட்டத்துக்கு நிதியுதவி செய்ய விரும்பும் பக்தா்கள் கோயில் நிா்வாகத்தை தொடா்புகொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT