காரைக்கால்

அரசு சாா்பில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

25th Sep 2022 06:04 AM

ADVERTISEMENT

 

காரைக்காலில் அரசு சாா்பில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்கத்தினா் வலியுறுத்தினா்.

காரைக்கால் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.எம். யாசின், துணைத் தலைவா் டி.கே.எஸ்.எம். கல்யாணசுந்தரம், செயற்குழு உறுப்பினா்

எம். சிங்காரவேலு உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். இந்த சந்திப்பு குறித்து சங்கத்தினா் கூறியது :

ADVERTISEMENT

விவசாயிகளிடமிருந்து இந்திய உணவுக் கழகம் நெல் கொள்முதல் செய்யவேண்டும், இதற்காக புதுவை அரசு சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவேண்டும் என ஆட்சியரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

மேலும் வாய்க்கால்களில் படா்ந்து இருக்கும் வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவும், காரைக்கால் கால்நடை மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவா் பணியிடங்களை விரைந்து நிரப்பவும் நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT