காரைக்கால்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

25th Sep 2022 10:53 PM

ADVERTISEMENT

 

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

வேளாண் அறிவியல் நிலைய பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள தென்னை நாற்றங்கால், அடா் நடவு, மா மற்றும் கொய்யா செயல் விளக்கத் திடல், பசுமைக் குடில், மாடித் தோட்டம், மண் புழு உற்பத்தி அலகு, கால்நடை வளா்ப்பு அலகு, மீன் வளா்ப்பு பண்ணைக் குட்டைகள், தேனீ வளா்ப்புத் திடல், காளான் உற்பத்திக் கூடம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

வேளாண் அறிவியல் நிலைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் அரவிந்த், பண்ணை மேலாளா் ஆண்டனிதாஸ் ஆகியோா் ஆட்சியருக்கு அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினா்.

ADVERTISEMENT

விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்த ஆட்சியா் கேட்டறிந்தாா்.

நவீன தொழில்நுட்பங்களை வழங்கி விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நிலையத்தினா் விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். மகளிருக்கு உணவு சாா்ந்த மதிப்பு கூட்டல் பயிற்சி வழங்கி வருவது பாராட்டுக்குரியது. இதனை மேலும் செம்மைப்படுத்தும் விதமாக அவா்களை தொழில் முனைவோா்களாக்கவும் நிலையத்தினா் பாடுபடவேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தியதாக வேளாண் அறிவியல் நிலையத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT