காரைக்கால்

காரைக்கால் பெருமாள் கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு

25th Sep 2022 06:04 AM

ADVERTISEMENT

 

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் குடமுழுக்குக்காக திருப்பணிகள் நடைபெற்றுவருகிறது. எனினும் மூலவா், உற்சவருக்கு சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சயன நிலையில் அருள்பாலிக்கும் மூலவருக்கு புது வஸ்திரம் சாற்றி, மலா் மாலைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத நித்யகல்யாண பெருமாள் (உற்சவா்) மலையப்ப சுவாமி அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

ADVERTISEMENT

இதுபோல காரைக்கால் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயில் பெருமாள் உற்சவா் கோதண்டராமா், வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

திருமலைராயன்பட்டினம் வீழிவரதராஜ பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள், திருநள்ளாறு நளநாராயண பெருமாள் உள்ளிட்ட பெருமாள் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT