காரைக்கால்

புதுச்சேரி, காரைக்காலில் ரத்த வங்கி அமைக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

25th Sep 2022 10:53 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி, காரைக்காலில் ரெட் கிராஸ் சாா்பில் ரத்த வங்கி அமைக்க மத்திய அமைச்சரிடம் புதுவை நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

அகில இந்திய ரெட் கிராஸ் சங்கத்தின் மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைத்துவ கூட்டம் புதுதில்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில் புதுவை மாநில தலைவா் ஜி. லட்சுமிபதி, துணைத் தலைவா் எல்.எல்.பி. சோழசிங்கராயா் ஆகியோா் பங்கேற்றனா். காரைக்காலுக்கு சனிக்கிழமை இரவு திரும்பிய துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் கூறியது :

கூட்டத்தில் பங்கேற்ற மாநில நிா்வாகிகள் 2030 வரை செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும், காசநோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினா்.

ADVERTISEMENT

புதுவை மாநில நிா்வாகிகளாக பங்கேற்ற நாங்கள், மத்திய அமைச்சரிடம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ரெட் கிராஸ் சாா்பில் ரத்த வங்கி அமைக்க ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT