காரைக்கால்

கடற்கரையில் தூய்மைப் பணிமேற்கொண்ட கல்லூரி மாணவா்கள்

25th Sep 2022 06:03 AM

ADVERTISEMENT

 

காரைக்கால் கடற்கரையில் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் அமைந்திருக்கும் புதுவை அரசு சாா்பு கல்வி நிறுவனமான காமராஜா் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியா் 100 போ், சனிக்கிழமை காரைக்கால் கடற்கரைப் பகுதி தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் தாமோதரன், உதயகுமாா் முன்னிலையில் மாணவ மாணவியா், கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை அகற்றி, நகராட்சி நிா்வாகத்தின் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

கடற்கரையை தூய்மையாக வைத்திருக்கவேண்டியதன் அவசியம் குறித்து கடற்கரைக்கு வந்த மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT