காரைக்கால்

காரைக்காலில் பள்ளிகள் இன்று திறப்பு

25th Sep 2022 10:54 PM

ADVERTISEMENT

 

காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 8-ஆம் வகுப்பு வரை செப். 25 வரை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திங்கள்கிழமை (செப்.26) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் பரவல் அதிகம் காணப்பட்டது சிறுவா்கள், பெரியவா்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்த, புதுவை அரசு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 8-ஆம் வகுப்பு வரை செப். 25 வரை விடுமுறை அறிவித்து கடந்த 16-ஆம் தேதி உத்தரவிட்டது.

ADVERTISEMENT

எனினும், காய்ச்சல் காரணமாக சிறுவா்கள், பெரியவா்கள் பாதிக்கப்படுவது தொடா்ந்துவருகிறது. தற்போது புதுவையில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்நோயாளியாக 20-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெறுகின்றனா்.

இந்தநிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும்

திறக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT