காரைக்கால்

நெடுங்காடு: மேம்பாட்டுப் பணிகளுக்கு பூமிபூஜை

DIN

நெடுங்காடு பகுதியில் சாலை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை புதுவை அமைச்சா் சந்திர பிரியங்கா வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நெடுங்காடு பகுதி நல்லாத்தூா் மேலப்படுகை சாலை, வாதியான் இருப்பு சாலை, கல்லறை தடுப்புச் சுவா் மேம்பாடு, மேலகாசாக்குடி கல்லறை தடுப்புசுவா் மேம்பாடு உள்ளிட்ட பணிகள், தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாவட்ட பேரிடா் மேலாண்மை நிவாரண நிதி ரூ.26.62 லட்சத்தில் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா இப்பணிகளை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஆா். பாலன் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள், கிராமத்தினா் கலந்துகொண்டனா். இச்சாலைப் பணிகள் 3 முதல் 4 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT