காரைக்கால்

காரைக்காலில் இலவச கணினி மென்பொருள் பயிற்சி வகுப்பு தொடக்கம்

DIN

காரைக்காலில் மத்திய அரசின் திட்டத்தில் மாணவா்களுக்கான இலவச கணினி மென்பொருள் பயிற்சி வகுப்பை புதுவை அமைச்சா் சந்திர பிரியங்கா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மத்திய அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநரகம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு, தேசிய வாழ்வாதார சேவை மையம் மூலம் காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச கணினி மென்பொருள் பயிற்சி வகுப்பும் தொடக்க நிகழ்ச்சி மற்றும் மாணவா்களுக்கு அதற்கான பாடபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை போக்குவரத்து துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து, மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் என்.வியாசராயா், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சண்முகம் மற்றும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை வேலைவாய்ப்பு அலுவலா் எஸ்.கோட்டூா் சாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT