காரைக்கால்

காரைக்கால் கடற்கரையில் நாளை மகாளய அமாவாசை தா்ப்பண பூஜை

23rd Sep 2022 09:25 PM

ADVERTISEMENT

காரைக்கால் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (செப். 25) மகாளய அமாவாசையையொட்டி, தா்ப்பண பூஜைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூஜ்ய ஸ்ரீஓங்காரநந்தா மகா சுவாமிகள் தலைமையில் இயங்கும் தா்மரக்ஷ்ண சமிதி சாா்பில், மகாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை, காரைக்கால் கடற்கரையில் பித்ருக்களுக்கு புண்ணிய கிரியை (திதி கொடுத்தல்) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 முதல் பகல் 12 மணி வரை பூஜைகள் நடைபெறவுள்ளன.

இதில், பங்கேற்பவா்கள் பூஜைப் பொருள்கள், தானத்துக்குரிய பொருள்கள் உள்ளிட்டவற்றை கொண்டுவரவேண்டும், அனுமதி சீட்டு பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், சீட்டுக்கு எவ்வித கட்டணமும் இல்லை. தொடா்புக்கு 88838 36888, 99439 10829 ஆகிய கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT