காரைக்கால்

காரைக்காலில் 19 பேருக்கு கரோனா

23rd Sep 2022 09:25 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 240 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் திருநள்ளாறு 5, நிரவி 3, வரிச்சிக்குடி 2, நல்லம்பல் 2, நெடுங்காடு 2, அம்பகரத்தூா் 2, காரைக்கால் நகரம், திருப்பட்டினம், விழிதியூா் தலா 1 என தொற்று உறுதியானது.

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 75 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT