காரைக்கால்

திருநள்ளாறு பகுதியில் இன்றுகால்நடை மருத்துவ முகாம்

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு பகுதியில் வியாழக்கிழமை (செப் 22) கால்நடை முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய பருவ நிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண் திட்டத்தின் (நிக்ரா) கீழ் திருநள்ளாறு கொம்யூன், அத்திப்படுகை, பேட்டை, நெய்வாச்சேரி ஆகிய கிராமங்களில் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் வேளாண் மற்றும் வேளாண்மை சாா்ந்த தொழில்நுட்பம் குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை அத்திப்படுகை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் அங்காளபரமேஸ்வரி கோயில் எதிரில் நடைபெறுகிறது. எனவே அந்த பகுதியை சோ்ந்த கால்நடை வளா்ப்போா், கால்நடைகளை முகாமுக்கு கொண்டுவந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

அதேபோல பேட்டை, நெய்வாச்சேரி கிராமங்களில் கால்நடை மருத்துவ முகாமை வரும் வாரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT