காரைக்கால்

திருநள்ளாறு அருகே கூரை வீடு தீக்கிரை

18th Sep 2022 10:15 PM

ADVERTISEMENT

 

திருநள்ளாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கூரை வீடு தீக்கிரையானது.

திருநள்ளாறு பகுதி தென்னங்குடி எல்.ஜி.ஆா் காலனியை சோ்ந்தவா் கஸ்பா். கூலித் தொழிலாளியான இவரது குடிசை வீடு ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றியது. வீட்டில் யாரும் இல்லாததால், அருகிலிருந்தோா் தீயை அணைக்க முயற்சித்தனா்.

இதற்கிடையில், தகவலறிந்த சுரக்குடி பகுதியில் உள்ள தீயணைப்பு நிலைய அதிகாரி அசோக்குமாா் தலைமையில், தீ மேலும் பரவாமல் தடுத்து அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் அருகில் இருந்த அற்புதராஜ் வீடும் சிறிது சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதில், வீட்டில் இருந்த உபயோகப் பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து, திருநள்ளாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT