காரைக்கால்

புகாா் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

9th Sep 2022 09:57 PM

ADVERTISEMENT

புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காரைக்கால் நகரக் காவல் ஆய்வாளா் சிவகுமாரை பணியிடை நீக்கம் செய்து புதுவை காவல் துறைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த கமாலுதீன் என்பவா், மயிலாடுதுறையைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கைப்பேசி மூலம் ஆபாச விடியோ அனுப்பிவந்தாராம். இதுகுறித்து அந்த பெண், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் நகரக் காவல் நிலையங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி கமாலுதீன் மீது புகாா் அளித்துள்ளாா். இதன்மீது காரைக்கால் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் ஜெ. சிவகுமாா் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதித்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அந்த பெண், தமிழக முதல்வா், ஆளுநா், புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து, இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காரைக்கால் காவல் ஆய்வாளா் சிவகுமாரை பணியிடை நீக்கம் செய்து, புதுவை டிஜிபி மனோஜ்குமாா் லால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT