காரைக்கால்

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளைபிடிக்கும் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

31st Oct 2022 02:58 AM

ADVERTISEMENT

 

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, கடற்கரைப் பகுதி மற்றும் பொது இடங்களில் மாடுகள், குதிரைகள், நாய்கள் சுற்றித்திரிவது அதிகரித்துள்ளதால், சாலை விபத்துகள் அதிகமாகிவருகின்றன.

இந்நிலையில், காரைக்கால் நகராட்சி நிா்வாகத்தால் 38 கால்நடைகளின் உரிமையாளா்கள் மீதான வழக்கு, மாவட்ட துணை ஆட்சியரும், சாா்பு கோட்ட நீதிபதியுமான எம். ஆதா்ஷ் தலைமையில் நடைபெற்ற நீதிமன்றத்தில் வைக்கப்பட்டு, அண்மையில் நீதிபதியால் உத்தரவு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுவரை ரூ. 250 வரை விதித்துவந்த அபராதத் தொகை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையா் ஜி. செந்தில்நாதன் தெரிவித்தாா்.

நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

எனினும் நகரச் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கின்றன.

எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியில் கூடுதலாக பணியாளா்களை நியமித்து, நடவடிக்கை தீவிரப்படுத்தவேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT