காரைக்கால்

காரைக்காலில் 9 பேருக்கு கரோனா

29th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 212 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் திருநள்ளாறு 4, நெடுங்காடு 2, அம்பகரத்தூா், கோட்டுச்சேரி, நிரவி தலா 1 என 9 பேருக்கு தொற்று உறுதியானது.

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் மொத்தம் 42 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT