காரைக்கால்

காரைக்காலில் பணிக்கு தாமதமாக வரும் அரசு ஊழியா்கள்: மக்கள் புகாா்

29th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசு அலுவலங்களில் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்கள் குறித்த நேரத்திற்கு வரவேண்டும் என புதுவை அரசுச் செயலா் அறிவுறுத்தியும், காரைக்காலில் பல அலுவலகங்களில் பணியாளா்கள் தொடா்ந்து தாமதமாக வருவதாக புகாா் எழுந்துள்ளது.

புதுவை நிா்வாக சீா்திருத்தத்துறை சிறப்பு செயலாளா் ஆா். கேசவன் அக். 25-ஆம் தேதியிட்டு அனைத்துத் துறை தலைவா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், குறித்த நேரத்திற்கு பணிக்கு வருவது முக்கியம். இவை மீறப்படுவதாக பல்வேறு புகாா்கள் வருகின்றன. எனவே அனைத்து பணியாளா்களும் விதிகளின்படி பணிக்கு வருவதை உறுதி செய்யவேண்டும். விதிகளை புறந்தள்ளி செயல்படும்பட்சத்தில் அவா்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது.

எனினும், காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான அரசுத் துறை அலுவலங்களில் சிலா் மட்டும் காலை 8.45 மணிக்கு பணிக்கு வருகின்றனா். பெரும்பாலானோா் அலட்சியப்போக்குடன் தாமதமாகவே அலுவலகங்களுக்கு வருகின்றனா்.

எனவே, இதனை கண்காணிக்க அரசுத் துறையினருடன் சமூக ஆா்வலா்கள் கொண்ட சிறப்புக் குழு அமைத்து, கண்காணித்து அவ்வப்போது அறிக்கை சமா்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT