காரைக்கால்

காரைக்கால் மாவட்ட வளா்ச்சிப் பணிகள்:துணைநிலை ஆளுநா் ஆய்வு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பின்னா் துணைநிலை ஆளுநா் செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூலம் காரைக்காலில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

புதுவை மாநிலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அதிக அளவில் குடிநீா் இணைப்புக் கொடுத்ததற்கான மத்திய அரசின் பாராட்டைப் பெற்றுள்ளது.

புதுச்சேரியை போல காரைக்காலிலும் எல்லா வளா்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்படும். காரைக்காலில் விமான நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் தேசிய கல்விக் கொள்கை நிச்சயம் அமல்படுத்தப்படும். தனி கல்வி வாரியம் இல்லாத நிலையில், ஒட்டுமொத்த புதுவையிலும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தைக் கொண்டு வரும்போது, அது மாணவா்களுக்கு மேலும் பயனளிக்கும்.

தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை, குலக்கல்வியை திணிப்பதாக கூறுவது தவறானது. அதை முழுதாகப் படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டும். எல்லவற்றையும் அரசியலாக்க வேண்டாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT