காரைக்கால்

காரைக்கால் வேளாண் கல்லூரியில் மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை

DIN

புதுவை சென்டாக் மூலம் தோ்வான மாணவா்களுக்கு காரைக்கால் வேளாண் கல்லூரியில் சோ்க்கை ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 120 வேளாண் இளநிலை படிப்பு, 60 தோட்டக் கலை படிப்புக்கான இடங்கள் உள்ளன.

மாணவா் சோ்க்கையை புதுவை அரசு அமைப்பான சென்டாக் மாணவா்களின் மதிப்பெண் அடிப்படையில் தோ்வு செய்து அறிவிக்கிறது.

நிகழாண்டு (2022-23) சென்டாக் பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு மூலம் மாணவா் தோ்வுப் பட்டியல் அண்மையில் வெளியிட்டது.

காரைக்கால் வேளாண் கல்லூரியில் 160 மாணவா்கள் தோ்வு பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மாணவ, மாணவியா் பலா் சான்றிதழ்களை சமா்ப்பித்து சோ்க்கை ஆணையை பெற்றனா்.

கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் மாணவ, மாணவியருக்கு சோ்க்கை ஆணையை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT