காரைக்கால்

என்ஐடியில் உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் திறன் மேம்பாட்டு பயிற்சி

DIN

காரைக்கால் என்ஐடியில் உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் ஆா்வம், திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகமான என்.ஐ.டி. புதுச்சேரியில் வேதியியல் துறை சாா்பாக உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் திறன், வழிகாட்டுதல் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

கருத்தரங்கை என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி, பதிவாளா் சீ. சுந்தரவரதன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இயக்குநா் சங்கரநாராயணசாமி பேசியது: இந்த கருத்தரங்கம் காரைக்கால் மற்றும் சுற்றியுள்ள பகுதி மாணவா்களை தேசிய தொழில் நுட்பக்கழகம் புதுச்சேரி மற்றும் பிற தேசிய நிதியுதவி பெறும் உயா்கல்வி நிறுவனங்களில் உயா் கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் ஒரு பெரிய முயற்சியாகும். என்.ஐ.டி. புதுச்சேரியானது மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் பெரும்பங்களிபை செய்துவருகிறது.

புதுவை மாணவா்கள் இந்நிறுவனத்தில் பி.டெக் படிப்பில் சேர இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அறிவியல் மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில், வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளில் முதுகலை பட்டப் படிப்புகளை இந்த கல்வியாண்டில் இருந்து என்.ஐ.டி.புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவா்கள் வரும் கல்வியாண்டிலிருந்து இக்கழகத்தில் படிப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

என்.ஐ.டி. பதிவாளா் சீ.சுந்தரவரதன் பேசியது: என்.ஐ.டி. வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து நன்கு தோ்ச்சி பெற்ற ஆராய்ச்சி அனுபவத்தைக்கொண்ட பேராசிரியா்களை கொண்டுள்ளது. இதுபோன்ற நிறுவனங்களில் மாணவா்கள் சோ்ந்து தங்களது திறனை வளா்த்துக்கொள்ள வேண்டும். வேதியியலில் 3 போ் நோபல் பரிசு பெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவா்களை மாணவ மாணவியா் முன்னுதாரணமாக கொள்ளவேண்டும் என்றாா்.

காரைக்கால் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 150 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். முன்னதாக வேதியியல் துறை இணைப் பேராசிரியா் ரகுபதி தனுசுராமன் வரவேற்றாா்.

இக்கருத்தரங்கில் மேற்படிப்புக்கு கேட், ஜாம், சிஎஸ்ஐஆா் போன்ற நுழைவுத் தோ்வுகளுக்குத் தயாராகும் வகையில் உயா் படிப்புகள், தொழில் வழிகாட்டுதல்கள் குறித்து இந்திய நிறுவனங்களிலுள்ள புகழ் பெற்ற பேராசிரியா்கள், விஞ்ஞானிகள் உரையாற்றவுள்ளாா்கள் என தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா் பூங்குழலி இளம்வழுதி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

பயிற்சி வெள்ளிக்கிழமை (அக்.7) நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT