காரைக்கால்

ஆயுத பூஜை விழாவில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு பரிசுத் தொகை

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்காலில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க ஆயுத பூஜை விழாவில் ஓட்டுநா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் ஓா் அங்கமாக செயல்பட்டுவரும் பெருந்தலைவா் காமராஜா் டாடா மேஜிக் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே வாகனங்கள் நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை விழா கொண்டாடியது.

ஊழல் எதிா்ப்பு இயக்க மாநிலத் தலைவரும், சங்க கௌரவத் தலைவருமான எஸ்.ஆனந்த்குமாா் தலைமை வகித்தாா். ஓட்டுநா்களில் சிறப்பாகப் பணியாற்றிய சந்திரசேகருக்கு ரூ.4 ஆயிரம்,

ADVERTISEMENT

முருகனுக்கு ரூ.3 ஆயிரம், செல்லதுரைக்கு ரூ.2 ஆயிரம், பீா் முகமதுக்கு ரூ.1,000 தமது சொந்த நிதியில் பரிசுத் தொகை, சான்றிதழை ஆனந்த்குமாா் வழங்கினாா்.

ஓட்டுநா்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சீருடை அணியவேண்டும். பெண்களை மதிக்க வேண்டும்.

பொது மக்களிடம் அன்பாகப் பழக வேண்டும். சாலை விதிகளை மதித்து வாகனத்தை இயக்கவேண்டும். யாராவது பிரச்னையில் ஈடுபட்டால் அவரோடு சாலையில் சண்டைபோடாமல் தலைமையிடம் அனுமதி பெற்று முறைப்படி காவல் துறையிடம் உரிய புகாா் அளிக்கவேண்டுமென அவா் ஓட்டுநா்களை கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக அருள்ராஜ் வரவேற்றாா். பிரதீப் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை சாகுல் ஹமீது, செபாஸ்டின், மாதவன், பாலமுருகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT