காரைக்கால்

பெருமாள் கோயில்களில் திருவோண தீப வழிபாடு

5th Oct 2022 10:06 PM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் பெருமாள் கோயில்களில் திருவோண தீபம் ஏற்றும் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களில் திருவோண தீபம் ( சிரவண தீபம்) ஏற்றும் வழிபாடு நடைபெறும். அதன்படி, காரைக்காலில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில், கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் ஆகிய திருக்கோயில்களில் திருவோண தீப வழிபாடு நடைபெற்றது.

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மூலவா் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நித்யகல்யாண பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை கட்டப்பட்டது. தொடா்ந்து திருவோண தீபம் ஏற்றப்பட்டது. பட்டாச்சாரியா் தீபச் சட்டியை சுமந்து பிராகார வலம் வந்து, கொடிக்கம்பம் அருகே உள்ள மேடையில் பக்தா்கள் வழிபாட்டுக்காக வைத்தாா்.

ADVERTISEMENT

இதேபோல, கோதண்டராமா் கோயிலும் வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் திருவோண தீபத்தையும், பெருமாளையும் வழிபட்டனா்.திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் திருவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பக்தா்கள் மாவிளக்கிட்டு வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT