காரைக்கால்

பெருமாள் கோயில்களில் நாளை திருவோண தீப வழிபாடு

4th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் பகுதி பெருமாள் கோயில்களில் புதன்கிழமை (அக்.5) விஜயதசமி அம்பு போடுதல் மற்றும் திருவோண தீப வழிபாடு நடைபெறவுள்ளது.

புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களில் பெரிய திருவோணமாக, திருவோண தீபம் (சிரவண தீபம்) ஏற்றும் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீநித்ய கல்யாண பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள், வீழி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் இந்த வழிபாடு நடைபெறவுள்ளது.

இதே நாளில் விஜயதசமியையொட்டி, குதிரை வாகனத்தில் சுவாமிகள் எழுந்தருளி அம்பு போடும் வைபவமும் நடைபெறவுள்ளது. திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இருந்து சுரக்குடி சந்திப்புக்கு சுவாமிகள் எழுந்தருளியும், காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் இருந்து சுவாமி பாரதியாா் சாலைக்கு எழுந்தருளியும், திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரா், ராஜசோளீஸ்வரா், ஜடாயுபுரீஸ்வரா், வீழி வரதராஜ பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய கோயில்களில் இருந்து குதிரை வாகனத்தில் சுவாமிகள் போலகம் பகுதி திடலுக்கு இரவு எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT