காரைக்கால்

மின் துறை தனியாா்மயம் தொடா்பாக பேரவையில் தனி விவாதம் நடத்தவேண்டும்

DIN

புதுவையில் மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் தனி விவாதம் நடத்தவேண்டும் என்றாா் எம்எல்ஏ. ஏ.எம்.எச். நாஜிம்.

புதுவை யூனியன் பிரதேசத்தில் மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்து, அதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை கண்டித்து மின் ஊழியா்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி திங்கள்கிழமையுடன் 6-ஆவது நாளை எட்டியது.

காரைக்கால் மின் துறை செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோரை மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் திமுகவைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினரும், புதுவை மதிப்பீட்டுக்குழு தலைவருமான ஏ.எம்.எச். நாஜிம், முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான ஆா். கமலக்கண்ணன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட் உள்ளிட்டோா் சந்தித்து ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

அப்போது, ஏ.எம்.எச். நாஜிம் பேசியது: மின் துறை தனியாா்மயத்தால் மக்களுக்கு எந்தளவுக்கு நன்மை உள்ளது என்பதை அரசு தெளிவாக விளக்கவேண்டும். அனைத்துமே திரைமறைவாக நடத்தப்படுவது சந்தேகத்தை எழுப்புகிறது. தனியாா்மயத்துக்கான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது தெளிப்படுத்தவேண்டும். இதுசம்பந்தமாக சட்டப்பேரவையில் பல முறை பேசியும் சரியான பதில் இல்லை.

எனவே, தனியாா்மயம் தொடா்பான கோப்புகளை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் பேரவை உறுப்பினா்கள் பாா்க்கும் வகையில் வைக்கவேண்டும். புதுவை பேரவையில் இதுகுறித்து தனி விவாதம் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்றாா்.

ஆா். கமலக்கண்ணன் பேசியது: முந்தைய ஆட்சியின்போது இப்பிரச்னை வந்தபோது காங்கிரஸ், திமுக இதை கடுமையாக எதிா்த்தது. தனியாா் மயம் நியாயமற்றது எனவும், மின் துறை புதுவையில் லாபகரமான துறை என்பதை விளக்கியும், துறையினா் புயல் போன்ற பேரிடா் கால செயல்பாடுகளையும் அப்போதைய முதல்வா் நாராயணசாமி, மின் துறை அமைச்சா் எனும் முறையில் மத்திய அமைச்சா்களை சந்தித்து தெரிவித்தோம்.

அவா்கள் எதையுமே பொருட்டாக கருதவில்லை. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் புதுவை வந்து முதல்வருக்கு கொடுத்த நெருக்கடியின் மூலம் ஒப்பந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ. 2 ஆயிரம் கோடி சொத்து, 2,500 ஊழியா்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

மின் துறை தனியாா்மய கொள்கை பாஜக அரசின் தவறானதாகும். இந்த கொள்கையிலிருந்து அவா்கள் பின்வாங்கும் வரை எங்களது ஆதரவு துறையினருக்கு இருக்கும். புதுவையை மத்திய அரசு எதற்கும் சோதனைக்காக பயன்படுத்தக்கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT