காரைக்கால்

காரைக்கால் வானொலியில் ஹிந்தி நிகழ்ச்சிகளை நிறுத்த திமுக வலியுறுத்தல்

DIN

காரைக்கால் பன்பலை வானொலியில் ஹிந்தி நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்தவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, காரைக்காலில், திமுக அமைப்பாளரும், தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் செய்தியாளா்களிடம் கூறியது: காரைக்கால் அகில இந்திய வானொலியியில் (பண்பலை ஒலிபரப்பு) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவித் பாரதி எனும் ஹிந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்பட்டன.

அப்போது, அதை திமுக கடுமையாக எதிா்த்தது. அப்போதைய புதுவை முதல்வா் ரங்கசாமி, நாடாளுமன்ற உறுப்பினா் ராதாகிருஷ்ணனிடம் பேசி மத்திய அரசுக்கு இதுதொடா்பாக அழுத்தம் கொடுத்தது. அதன் காரணமாக அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

நல்ல லாபத்தில் இயங்கிவரும் காரைக்கால் வானொலியில் சுவடு தெரியாமல் மீண்டும் ஹிந்தி நிகழ்ச்சிகள் நுழைக்கப்பட்டு ஒலிப்பரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு திமுக கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. தினமும் 4 மணி நேரத்துக்கு ஹிந்தி நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்பு செய்யப்படுவதால் காரைக்கால் வானொலி நிலையத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

இந்தியாவிலேயே லாபகரமாக இயங்கிவரும் வெகுசில வானொலி நிலையங்களுள், காரைக்கால் வானொலி நிலையமும் ஒன்று. ஹிந்தி நிகழ்ச்சிகளின் இந்த 4 மணி நேர ஒலிப்பரப்பால், தமிழ் நிகழ்ச்சிகளுக்கான நேரம் குறைகிறது. முதியோா், தியாகிகள், மகளிா் சுய உதவிக் குழுவினா் என பல்வேறு தரப்பினா் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறைகின்றன.

ஹிந்தி திணிப்பால் வானொலி நிகழ்ச்சிகளை கேட்பவா்களின் எண்ணிக்கை குறையும். இதன் காரணமாக நிகழ்ச்சிகளினூடே ஒலிப்பரப்பப்படும் விளம்பரங்களும் குறைந்து வா்த்தகம் பாதிக்கும். இந்த விவகாரத்தை ஹிந்தி திணிப்பின் ஒரு பகுதியாக திமுக கருதுகிறது. எனவே, இந்த ஹிந்தி நிகழ்ச்சிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு அந்த நேரத்தில் மீண்டும் தமிழ் நிகழ்ச்சிகளே ஒலிப்பரப்பப்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT