காரைக்கால்

தேசிய நடனப் போட்டியில் காரைக்கால் பள்ளி சிறப்பிடம்

3rd Oct 2022 10:58 PM

ADVERTISEMENT

தேசிய அளவில் பல்வேறு மாநில பள்ளி மாணவா்கள் பங்கேற்ற நடனப் போட்டியில், காரைக்கால் பள்ளி முதல் பரிசை பெற்றது.

யுனைட்டா் ஸ்கூல்ஸ் ஆா்கனைசேஷன் ஆஃப் இந்தியா எனும் (யுஎஸ்ஓ) அமைப்பு, தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பள்ளிகள் பங்கேற்கும் வகையிலான பல்வேறு விதமான போட்டிகளை நடத்துகிறது. நிகழாண்டு சென்னையில் கடந்த செப்.26 முதல் 30-ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், உத்தரபிரதேசம், மேகாலயா, ஜம்மு காஷ்மீா், சத்தீஸ்கா், தமிழகம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

புதுவை மாநிலத்திலிருந்து பல்வேறு பள்ளி மாணவா்கள் பங்கேற்ற நிலையில், காரைக்கால் பகுதியில் உள்ள குட்ஷெப்பொ்டு ஆங்கிலப் பள்ளி மாணவா்களும் பங்கேற்றனா். தமிழா்களின் பாரம்பரிய நடனங்களை ஆடிய இப்பள்ளி மாணவா்கள் நடன பிரிவில் முதல் பரிசை பெற்றனா். பரிசு பெற்றுத் திரும்பிய மாணவா் குழுவினரை பள்ளித் தாளாளா் ரான்சன்தாமஸ், பள்ளி முதல்வா் ஜாய்தாமஸ் ஆகியோா் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT