காரைக்கால்

முதியோா் தின கையொப்ப பிரசாரம் தொடக்கம்

DIN

உலக முதியோா் தினத்தையொட்டி, காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் கையொப்ப பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பு அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சமூகப் பணி துறையுடன் இணைந்து முதியோா் விழிப்புணா்வு குறித்த கையொப்ப பிரசாரத்தை நடத்தின. கல்லூரி முதல்வா் வியாசராயா் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பிரசாரத்தை தொடக்கிவைத்து, முதியோரை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினாா்.

கல்லூரி சமூகப் பணித் துறைத் தலைவா் சிவகுமாா் மற்றும் ஆசாத், தேசிய ஊரக வளா்ச்சித்துறை பணியாளா் ரன்தீா் மற்ற துறை பேராசிரியா்கள் பேராசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு முதியோா் நலன் குறித்து பதிவிட்டனா்.

முதியோா் பாதுகாப்பு தொடா்பாக ஹெல்ப் ஏஜ் இந்தியா, தேசிய இலவச முதியோா் உதவி எண் 14567-ஐ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT