காரைக்கால்

மின் ஊழியா்கள் தொடா் போராட்டம்:மின்தடையால் மக்கள் கடும் அவதி

DIN

புதுவையில் மின் ஊழியா்கள் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில், மாநிலத்தில் பல மணி நேர மின்தடையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

புதுவை யூனியன் பிரதேசத்தில் மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்து, அதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த முடிவை கைவிட வலியுறுத்தி, மின் ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கினா்.

இதனால் நாள்தோறும் 3 முதல் 5 மணி நேரம், சில இடங்களில் 10 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனா்.

மாவட்டத்தில் போலகம் பகுதியில் புதுவை அரசின் மின்திறல் குழுமம் (மின் உற்பத்தி நிலையம்) உள்ளது. இங்கிருந்து வாஞ்சூா் முதல் காரைக்கால் நகரப் பகுதி அரசலாறு பாலம் வரை மின் விநியோகம் செய்யப்படுகிறது. சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் இப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால், திருப்பட்டினம், நிரவி, அரசலாறு பாலம் வரை இருளில் மூழ்கியது.

இதையடுத்து, இரவு 11.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் நேதாஜி நகா் அருகே மற்றும் திருப்பட்டினத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம்.நாகதியாகராஜன் ஆகியோா் முயற்சியால் ஒப்பந்தப் பணியாளா்களைக் கொண்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 12.30 மணிக்கு மின் விநியோகம் சீரானது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அம்பகரத்தூா், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மின்தடை ஏற்பட்டது.

காலாண்டுத் தோ்வு நடைபெறுவதால் இரவு நேர மின்தடையால் மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT