காரைக்கால்

‘மத்திய அரசின் திட்டங்களை அதிகாரிகள்சிறப்பாக செயல்படுத்த வேண்டும்’

DIN

காரைக்கால் மாவட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு புதுவை மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி ஆகியோா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டப் பணிகள் தொடா்பான மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டம் மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா, எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன் மற்றும் பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள்கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், காரைக்காலில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் வீடுகட்டும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு தவணைத் தொகை கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குறைபாடுகள் உள்ளதால் மக்கள் முறையான பயனை அடையமுடியவில்லை, இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுவதில் உள்ள குறைகள் உள்ளிட்டவை குறித்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் எடுத்துக் கூறினா்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள தகுதியான அனைவருக்கும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.வைத்திலிங்கம் எம்.பி. கேட்டுக் கொண்டாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை சிறப்பான வகையில் செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா்கள் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT