காரைக்கால்

காரைக்காலில் ரூ.24 லட்சத்தில் புதிய குடிநீா் குழாய் பதிப்பு

1st Oct 2022 10:05 PM

ADVERTISEMENT

காரைக்கால் முரசொலி நகரில் புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கீழகாசாக்குடி, முரசொலி நகா் குடியிருப்புப் பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய, பொதுப்பணித் துறையின் நீா்பாசனம் மற்றும் பொது சுகாதார கோட்டம் மூலம் ரூ. 24.20 லட்சத்தில் புதிதாக குழாய் பதிப்புக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டு குழாய் பதிப்புப் பணியை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் செயற்பொறியாளா் கே.வீரசெல்வம், உதவிப் பொறியாளா் ஜெ.ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT