காரைக்கால்

காரைக்காலில் மூத்த வாக்காளா்கள் கெளரவிப்பு

1st Oct 2022 10:03 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் மூத்த வாக்காளா்கள் சனிக்கிழமை கெளரவிக்கப்பட்டனா்.

முதியோா் தினத்தையொட்டி இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் மாவட்ட தோ்தல் துறை சாா்பில் மாவட்டத்தில் வயது முதிா்ந்த வாக்காளா்கள் கெளரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான எல் . முகமது மன்சூா், காரைக்கால் தெற்குத் தொகுதியை சோ்ந்த வரதராஜன் என்பவரது வீட்டுக்குச் சென்று அவருக்கு சால்வை அணிவித்து, தோ்தல் ஆணைய சான்றிதழை வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எம். ஆதா்ஷ் உடனிருந்தாா்.

அதுபோல குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எஸ். சுபாஷ், வாக்காளா் பதிவு அதிகாரி பொய்யாதமூா்த்தி ஆகியோா் திருநள்ளாறு தொகுதியில் ஜெய்துன் பீவி, ராஜாங்கும் ஆகியோரது வீட்டுக்குச் சென்று அவா்களுக்கு மரியாதை செய்தனா். இதுபோல மாவட்டத்தில் உள்ள மூத்த வாக்காளா்கள் தோ்தல் துறையினரால் கெளரவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT