காரைக்கால்

மயில் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் வரிச்சிக்குடியில் பள்ளி மாணவ - மாணவியா் பங்கேற்ற மயில் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக வயல்வெளிப் பகுதி, கருவேல மரங்கள் உள்ள பகுதிகளில் மயில்கள் நடமாட்டம் உள்ளன. வரிச்சிக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் குழுவினா், காரைக்கால் பகுதியில் மயில்களின் எண்ணிக்கை குறித்த திட்ட அறிக்கை தயாா் செய்துவருகின்றனா்.

இந்நிலையில், மக்களிடையே மயில் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவ- மாணவியா் சுமாா் 100 போ் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. தலைமை பொறுப்பாசிரியா் ராஜவேணி பேரணியை தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

தேசிய பறவையான மயிலை பாதுகாப்போம் என்ற விழிப்புணா்வு வாசங்களுடன் மாணவ- மாணவியா் பதாகைகள் ஏந்தி வந்தனா். வரிச்சிக்குடி பகுதியில் பல்வேறு இடங்களின் வழியே நடைபெற்ற பேரணி மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

இதில், அறிவியல் ஆசிரியா் கோ.ராஜு, தியாகராஜன் உள்ளிட்ட ஆசிரியா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT